இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கப்படுமா? இன்று முக்கிய தீர்மானம்!

இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளது.

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கப்படுமா? இன்று முக்கிய தீர்மானம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இன்று(21) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால், விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும். அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவும் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர் மட்ட பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்ட தடை காரணமாக, இலங்கை கிரிக்கெட் தலைவரால் இந்த சந்திப்பில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT