மழை நிலைமை சற்று அதிகரிக்கும்... வெப்பத்தால் தவிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் மழை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை சற்று அதிகரிக்கும்... வெப்பத்தால் தவிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் மழை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சூரியன் உச்சம் 

இதேவேளை, ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதற்கிணங்க இன்று (29) நண்பகல் 12.11 அளவில் பலவி (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் சாலை (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT