இன்று முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று 5 பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் மழை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.