அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் கடந்த 2010-க்குப் பிறகு முதன்முறையாக ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா, ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெறும் இந்த மரண தண்டனைகள், படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டவையாகும்.

அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

ஓட்டல் ஊழியரைக் கொலை செய்த அந்தோணி டேரல் (66), தனது காதலியை சுட்டுக்கொன்ற கார்லோஸ் (70) மற்றும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஜெரமி வில்லியம்ஸ் (42) ஆகிய மூவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இவர்களுக்கு ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவில் இதற்கு முன்பு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வு அமெரிக்காவின் மரண தண்டனை நடைமுறைகளில் ஒரு அரிய சம்பவமாக கருதப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT