அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 8 குழந்தைகள் உயிரிழப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சி

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 குழந்தைகள் உயிரிழப்பு. சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 8 குழந்தைகள் உயிரிழப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 6.00 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த தாக்குதலில் 1 முதல் 14 வயதுக்குள் உள்ள 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2 பெண்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். காவல்துறையினரை கண்டதும் தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை துரத்திச் சென்ற காவல்துறையினர் அதே பகுதியில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல குழந்தைகள் உயிரிழந்தது அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT