வெஞ்சர் பகுதியில் ஓடையில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட், வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெஞ்சர் பகுதியில் ஓடையில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நோர்வூட், வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசுவின் சடலம் கிடப்பதை இன்று காலை (24)  கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அப் பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிசு பொலித்தீன் உறையில் சுற்றப்பட்ட நிலையில் ஓடையில் வீசப்பட்டு உள்ளது எனவும் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT