பரீட்சைகளுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது

இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளது.

பரீட்சைகளுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது
ADVERTISEMENT
ADVERTISEMENT

இடைநிறுத்தப்பட்ட 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், ஏனைய பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

அத்துடன், மேல் மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த கணிதப் பாடத்தின் வினாத்தாளும், பரீட்சைக்கு முன்னதாகவே கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, மேல்மாகாண பாடசாலைகளில்  10 ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான முதலாம் பாக பரீட்சை நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பகுதி இரணடு பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT