வரி அடையாள இலக்கம் பெப்ரவரி முதல் கட்டாயமாக்கப்படும் 

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வரி அடையாள இலக்கம் பெப்ரவரி முதல் கட்டாயமாக்கப்படும் 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவு செய்யும் போதும் வரி அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

வரி அடையாள அட்டை பதிவு செய்வது கட்டாயம் என்றும் ஒருவரது ஆண்டு வருமானம் 12 இலட்சத்துக்கு மேல் இருந்தால், அவர் அல்லது அந்த அமைப்பு வரி செலுத்த வேண்டும் என்பதுடன், அவர்கள் நேரடியாக வரி செலுத்துபவராக மாற்றப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT