ADVERTISEMENT

Tag: இலங்கை பொலிஸ்

கொழும்பின் 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு! போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸார் அதிரடி

குறிப்பாக சில குடியிருப்புப் பகுதிகளை மையப்படுத்தி இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அதனால் பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 9,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது: இலங்கை பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட 9,105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவா? அசையும், அசையா சொத்துகள் முடக்கப்படும்

நீதிமன்ற பிடியாணையைத் தவிர்த்து தலைமறைவாக இருக்கும் நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்குவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பவளப்பாறைகளுடன் இருவர் சிக்கினர்!  

சட்டவிரோதமான முறையில் கறுப்புப் பவளப்பாறைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிசை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வைத்து இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை புலனாய்வுப் பிரிவினரும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளன.

போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்!

சமூக வலைத்தளங்களில் போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வைரலானதையடுத்து, கணேமுல்ல பகுதியில் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த 11 வயதுச் சிறுவனைப் பொலிஸார் பாதுகாப்புக் காவலில் எடுத்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கிய ரூ. 35 மில்லியன் பெறுமதியான சொகுசு ஜீப் பொலிஸாரால் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 35 மில்லியன் ரூபா பெறுமதியான டொயோட்டா ரக சொகுசு ஜீப் வண்டியை பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 14 நாட்களுக்கு முடக்கியுள்ளது.

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

தெஹிவளையில் வீடு மாறி நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயது சிறுவனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு; சிறுவன் படுகாயம்

அத்துருகிரிய கொடகம வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணை.

செவிப்புலன் வலுவிழந்தோருக்காக 119 அவசர சேவையில் புதிய வசதி

செவிப்புலன் வலுவிழந்தோர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய வசதியை இலங்கை பொலிஸார் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்துகின்றனர்.

பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 5 பேர் கைது

பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, அதில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் மூன்று வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் சட்டம் பாயும் – பொலிஸார் எச்சரிக்கை!

பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்து, ஒலி காரணமாக இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், குறித்த ஒலி நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்துவார்கள்.

கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜை கொலை: சீனர்கள் மூவரை தேடும் பொலிஸார் – பொதுமக்களின் உதவி கோரல்

விசாரணைகளில், தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாகவும், சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்த அவர்களின் விசா காலம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக பொய்த் தகவல் பரப்பியவர் கைது

அவர் வெளியிட்ட தகவல்களுக்கு உரிய ஆதாரங்கள் அல்லது உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் எதுவும் இல்லாத நிலையில், அவை பொய் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எனக் கூறப்படுகிறது.

சிறை அதிகாரிகள் தொடர்பான இரகசிய தகவல்களை சேகரித்த நபர் கைது – பொலிஸார் அதிர்ச்சி தகவல்

புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே குறித்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு: 7 மாதங்களில் 749 பேர் பலி! தலைக்கவசம் குறித்து எச்சரிக்கை

உயிரிழந்தவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெகசின் சிறையில் பரபரப்பு - 'E' வார்டில் கைதிகள் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

பொரளை மெகசின் சிறையில் நேற்று (06) இரவு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 'E' வார்டில் இருந்த கைதிகள் அமைதியின்மை நடவடிக்கையில் ஈடுபட்டதால், சிறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.