தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம்: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 மிமீ வரை பலத்த மழையும், மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம்: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு மாகாணம், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT