6 மாதங்களுக்கு மேலும் நீடிக்கப்படும் கட்டுப்பாடு

வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 மாதங்களுக்கு மேலும் நீடிக்கப்படும் கட்டுப்பாடு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏப்ரல் 2020 முதல் மூலதனப் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி பரிமாற்றங்கள் தொடர்பான வெளிப்புற பணப் பரிமாற்றங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன.

இது தொடர்பான கடைசி உத்தரவு 2022 டிசம்பர் 22ஆம் திகதி 2017ஆம் ஆண்டின் 12ஆம் எண் சட்டத்தின் கீழ் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் வெளியிடப்பட்டது.

இந்த உத்தரவு ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாவதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற அனுமதியைப் பெற்ற பின், இந்த உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT