ரீசார்ஜ் கட்டணம் உயர்வு; திடீரென அறிவித்த ஜியோ

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு; திடீரென அறிவித்த ஜியோ
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பின் முதலாவது முறையாக ஜியோ நிறுவனம் தங்களுடைய செல்போன் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ தற்போது தனது சேவை கட்டணத்தை அதிகரித்து பிள்ளையார் சுழிபோட்ட நிலையில் அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT