பாடசாலை உபகரண விலைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பாடசாலைகளுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகமாக உள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
டொலரின் பெறுமதி உயர்வடைந்த சந்தர்ப்பத்தில் அதிகரித்த இந்த பொருட்களின் விலையானது டொலரின் பெறுமதி கணிசமாக குறைந்துள்ள நிலையிலும், பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
அத்துடன், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -