சென்னையில் காற்றுடன் லேசான மழை - மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.

சென்னையில் காற்றுடன் லேசான மழை - மக்கள் மகிழ்ச்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்றி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மிதமான மழை பெய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் காரணமாக வெப்பம் தணிந்து காற்றுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT