10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது

பொதுத்தேர்வு அட்டவணை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் அவர் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுத்தேர்வு அட்டவணை

2023-24ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் அவர் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2024 பிப்ரவரி 23 தொடங்கி பிப்ரவரி 29 வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 வரை பொதுத்தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10-ல் வெளியிடப்படும்.

11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19 தொடங்கி 24 முடிவடைகிறது. பொதுத்தேர்வு 2024 மார்ச் 4  தொடங்கி மார்ச் 24 நிறைவு பெறும். மே 14ஆம் திகதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12 தொடங்கி பிப்ரவரி 17 முடிவடைகிறது. மார்ச் 1 தொடங்கி மார்ச் 22 வரை பொதுத்தேர்வு நடைபெறும். மே 6-ம் திகதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT