ATMs மற்றும் CDMs இயந்திரங்களுக்கு அருகில் பணப் பரிமாற்ற மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பொதுமக்களின் உதவி செய்யும் மனப்பான்மையைச் சாதகமாகப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ATMs மற்றும் CDMs இயந்திரங்களுக்கு அருகில் பணப் பரிமாற்ற மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

தானியங்கி பணப் பரிவர்த்தனை இயந்திரங்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களுக்கு அருகில் இடம்பெற்று வரும் புதிய வகை நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பொதுமக்களின் உதவி செய்யும் மனப்பான்மையைச் சாதகமாகப் பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பண வைப்பு இயந்திரங்களுக்கு அருகில் நடமாடும் மோசடி நபர்கள், தமது பணத்தை இயந்திரத்தில் வைப்பிலிட முடியவில்லை எனக் கூறி அங்கிருக்கும் அப்பாவிப் பொதுமக்களிடம் பணத்தை மாற்றித் தருமாறு கோருகின்றனர். பெரும்பாலும் 500 ரூபாய் பணத்தாள்களை வழங்கி மாற்றக் கோருவதன் மூலம் இந்த மோசடி ஆரம்பிக்கப்படுகின்றது. 

இதன்போது பொதுமக்கள் பணத்தை வழங்கிய பின்னர், தாம் பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கூறி அவர்களைத் தவறாக வழிநடத்தி, ஏமாற்றி பணத்தைத் திருடிச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தானியங்கி வங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், இவ்வாறான இயந்திரங்களின் சூழலில் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் அல்லது நபர்கள் தென்பட்டால் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT