புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

கொழும்பு - புறக்கோட்டையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் தர நியமங்களை மீறிய 801 பிளாஸ்டிக் போத்தல்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை திடீர் சுற்றிவளைப்புகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளது. 

இந்த நடவடிக்கையின் போது தர நியமங்களை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 801 பிளாஸ்டிக் போத்தல்கள் அதிகாரிகளால் வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலதிக விசாரணைகள் முடிவடைந்ததும் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரநிலை கட்டாயமாகும். 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் போத்தல்கள், இலங்கை தரநிலைகள் நிறுவகத்தின் தரச் சான்றிதழ் குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் போத்தல்கள் அந்நிறுவகத்தின் இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டு, உரிய விற்பனை அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டத் தேவையாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வர்த்தகர்கள் இவ்வாறான போத்தல்களை விற்பனை செய்வதற்கு முன்னர் சட்ட மற்றும் தரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதுடன், கொள்வனவு தொடர்பான பற்றுச்சீட்டுகள் மற்றும் விநியோகஸ்தர் விவரங்களை முறையாகப் பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நுகர்வோர், உள்நாட்டு உற்பத்திகளை வாங்கும் போது SLS தரக்குறியீட்டையும், இறக்குமதி செய்யப்பட்டவைகளுக்கு உரிய அங்கீகாரத்தையும் சரிபார்த்து பற்றுச்சீட்டுடன் வாங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகளை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 

மேலும், சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, பொதுமக்கள் அறிவிக்க முடியும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT