துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொருவர் காயம்
பாணந்துறையில் ( Panadura) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்
ADVERTISEMENT
ADVERTISEMENT
பாணந்துறையில் ( Panadura) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்
பாணந்துறை, ஹிரணவில் (Hirana)பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் T-56 துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹிரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT