நாய், பூனை இறைச்சிக்கு இந்தோனேசிய சந்தையில் தடை விதிப்பு

பூனை, நாய் இறைச்சியின் விற்பனைக்கு இந்தோனேசியா சுலவேசி தீவில் உள்ள சந்தையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாய், பூனை இறைச்சிக்கு இந்தோனேசிய சந்தையில் தடை விதிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பூனை, நாய் இறைச்சியின் விற்பனைக்கு இந்தோனேசியா சுலவேசி தீவில் உள்ள சந்தையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் பூனை, நாயுடன் வெளவால், எலி, பாம்பு, குரங்கு ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகில் நாய், பூனை இறைச்சியின் விற்பனையை அனுமதிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும்.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் பூனை, நாய் இறைச்சியின் வர்த்தகத்தை நிறுத்தியிருக்கும் முதல் சந்தை இது என்று விலங்கு உரிமை அமைப்பு தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தடை மூலம் பல்லாயிரம் விலங்குகள் காப்பாற்றப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறித்த சந்தையில் விலங்குகள் அடிக்கப்பட்டும் சுடப்பட்டும் கொல்லப்பட்டதுடன், உயிருடன் இருக்கும்போதே அவற்றின் உரோமம் எரிக்கப்பட்டதாகவும் விலங்குநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT