பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் 87 சட்டவிரோத கட்டடங்கள்: இம்மாதத்துக்குள் அகற்றப்படும்
பம்பலப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையிலான கடற்கரையோரப் பகுதியில் 87 சட்டவிரோத கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத நிர்மாணங்களையும் நடப்பு மாதத்துக்குள் முழுமையாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடற்கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாறான சட்டவிரோத நிர்மாணங்கள் காரணமாக, அவசர பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகவுள்ள ஐந்து வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், மரைன் டிரைவ் கடற்கரையோரப் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.