கொழும்பு அணியை இலகுவாக சுருட்டியது காலி டைட்டன்ஸ்!

எல்.பி.எல் போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் காலி அணி 8 விக்கெட்டுகளால் கொழும்பு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கொழும்பு  அணியை இலகுவாக சுருட்டியது காலி டைட்டன்ஸ்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

எல்.பி.எல் போட்டித் தொடரின் நேற்று நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் காலி அணி 8 விக்கெட்டுகளால் கொழும்பு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4அவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - காலி டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இப்போட்டியில் டாஸ் வென்ற காலி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கொழும்பு அணிக்கு பதும் நிஷங்க மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். 

ஆனால் இதில் நிஷங்க 2 ரன்களிலும், பாபர் ஆசாம் 6 ரன்களையும் எடுத்த நிலையில் லஹிரு குமாரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் களமிறங்கிய லஹிரு உதான 14, நிபுன் தனஞ்செய 13, நுவனிந்து ஃபெர்னாண்டோ 14, முகமது நவாஸ் 11, இஃப்திகார் அஹ்மது 5, கேப்டன் சாமிக கருணரத்ன 2 ரன்களுக்கும் என வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய டெய்ல் எண்டர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

காலி டைட்டன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளையும், சீகுகெ பிரசன்னா 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய காலி அணி 8 ஓவர்கள் 3 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

இதன்படி, எல்.பி.எல் போட்டித் தொடரின் தீர்மானகரமான போட்டியில் காலி அணி 8 விக்கெட்டுகளால் கொழும்பு அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

போட்டியில் பெற்ற சிறப்பான வெற்றியால் காலி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை அடைந்தது.

அதன்படி முதல் அரையிறுதியில் தம்புள்ளை அணியுடன் காலி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்த தோல்வியின் மூலம் கொழும்பு அணி இவ்வருட எல்பிஎல் போட்டியில் இருந்து விலக வேண்டியதாயிற்று.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT