கொஹுவல ATMஇல் பண மோசடி: பெண்ணை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸ்

மொரட்டுவ பெண்ணின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி கொஹுவல மக்கள் வங்கியில் பணத்தை மீளப்பெற்ற சந்தேகநபரான பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கொஹுவல ATMஇல் பண மோசடி: பெண்ணை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸ்
பொலிஸார் வெளியிட்ட சந்தேகநபரான பெண்ணின் புகைப்படம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஏரிஎம் (ATM) அட்டையைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்ற சந்தேகநபரான பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார், பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி கொஹுவல மக்கள் வங்கிக் கிளையின் ஏரிஎம் இயந்திரத்தினூடாக குறித்த சந்தேகநபர் பணத்தை மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள தோற்றத்தை ஒத்த சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாக அது குறித்து அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான சிசிரிவி பதிவுகளின் அடிப்படையில் குறித்த பெண்ணைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கொஹுவல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் 071 8591669 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது கொஹுவல பொலிஸ் நிலையத்தின் 011 2853929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொண்டு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT