காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு: ஹமாஸ் தலைவரின் மகன் உயிர் தப்பினார்

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கலீல் அல் ஹய்யாவின் மகனும் அவரது குடும்பத்தினரும் உயிர் தப்பியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, காஸாவின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு: ஹமாஸ் தலைவரின் மகன் உயிர் தப்பினார்
ADVERTISEMENT
ADVERTISEMENT

காஸாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் அல் ஹய்யாவின் (Khalil al-Hayya) குடும்பத்தினரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் அவரது மகனும் குடும்பத்தினரும் உயிர் தப்பியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காஸாவின் ஏனைய பகுதிகளில் நேற்று (27) இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னணியிலும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

கலீல் அல் ஹய்யாவின் 29 வயதுடைய மகனான இஸ்ஸெதீன் அல் ஹய்யா (Izzeldeen al-Hayya) மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த வான்வழித் தாக்குதலில் உயிர் தப்பியுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் அதிகாரி பாசெம் நயீம் தெரிவித்துள்ளார்.

எனினும், ஹமாஸ் தலைவரின் மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏற்கனவே உயிரிழந்த கலீல் அல் ஹய்யாவின் மற்றுமொரு மகனான அஸ்ஸாமின் குடும்பத்தினரும் இந்தத் தாக்குதலில் உயிர் தப்பியுள்ளனர்.

இஸ்ஸெதீன் அல் ஹய்யா, கலீல் அல் ஹய்யாவின் உயிருடன் உள்ள கடைசி மகன் என பாசெம் நயீம் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தகவல்களின்படி, கலீல் அல் ஹய்யாவின் ஏனைய நான்கு மகன்களான ஹம்ஸா, ஒசாமா, ஹுமாம் மற்றும் அஸ்ஸாம் ஆகியோர் வெவ்வேறு காலப்பகுதிகளில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ஸெதீனின் இரட்டைச் சகோதரரான ஹுமாம், கடந்த ஆண்டு கட்டாரில் ஹமாஸ் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

குறித்த தாக்குதலில் கலீல் அல் ஹய்யா உயிர் தப்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கலீல் அல் ஹய்யாவின் மகனைப் படுகொலை செய்வதற்கும் அவரது குடும்பத்தினரை இலக்குவைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்தத் தாக்குதல் என ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹமாஸ் தலைவருக்கு எதிராக முன்னர் விடுத்திருந்த அச்சுறுத்தல்களுடன் இந்தத் தாக்குதலைத் தொடர்புபடுத்தி அந்த அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சிப்பதாகவும் ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

எனினும், குறித்த தாக்குதலின் நோக்கம் தொடர்பான ஹமாஸ் அமைப்பின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேலிய தரப்பின் பதில் வழங்கப்படவில்லை.

மூலம்: அல் ஜசீரா / ரொய்ட்டர்ஸ்

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT