நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை; அறிவிப்பு வெளியானது

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பெய்யலாம்.
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை; அறிவிப்பு வெளியானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (30) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பெய்யலாம்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -