நாட்டில் இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை

இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது. 

நாட்டில் இன்று மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (20) ஆபரண தங்கத்தின் விலையில் மேலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அண்மையில் டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகிறது. 

நேற்றைய தினம்  22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாயாக காணப்பட்டது.

அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாயாக பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது. 

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாயாக காணப்படுகிறது. 

ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபாய் வரையில் குறைந்த போது மேலும் விலை குறைப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT