இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு: ஒரு பவுன் ரூ. 4 லட்சத்தைக் கடந்து புதிய உச்சம்!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ. 9,000 வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு: ஒரு பவுன் ரூ. 4 லட்சத்தைக் கடந்து புதிய உச்சம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக சந்தை நிலவரங்களுக்கு இணையாக இலங்கையிலும் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்று (23) நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் ரூ. 3,000 வரை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ. 9,000 வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய புதிய விலை நிலவரங்களின்படி, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 51,200 ஆகவும், ஒரு பவுன் ரூ. 409,600 ஆகவும் பதிவாகியுள்ளது. அதேபோல், ஆபரணத் தங்கமான 22 காரட் ஒரு கிராம் ரூ. 46,900 க்கும், ஒரு பவுன் ரூ. 375,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 21 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 44,750 ஆகவும், ஒரு பவுன் ரூ. 358,000 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கு முன்னர் தற்போதைய சந்தை விலையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT