வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: அமைச்சர் தகவல்

இலங்கை தேசிய விவசாயிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 மாவட்ட தலைவர்களை நேற்று(21) சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: அமைச்சர் தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பெரும் போக  உர கொள்முதல் செய்வதற்காக 1200 கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய விவசாயிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 மாவட்ட தலைவர்களை நேற்று(21) சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், ஒரு ஹெக்டேர் நெல் செய்கைக்கு 15,000 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உரக் கொள்வனவுக்கான மானியமாக அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் இந்தப் பணத்தில் விவசாயிகள் தமது விருப்பத்திற்கேற்ப இரசாயன உரங்களையோ அல்லது பயிற்செய்கைக்கு ஏற்ற உரங்களையோ கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறையும் அரசாங்க உர நிறுவனங்களினால் ஒரு மூட்டை யூரியா உரம் 9000 ரூபாய்க்கு வழங்கப்படும் எனவும், அதே விலையில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க தனியார் துறையும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT