மீண்டும் தலைதூக்கும் டெங்கு; வெளியான அறிவிப்பு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, இந்த வருடம் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மீண்டும் தலைதூக்கும் டெங்கு; வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, இந்த வருடம் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறித்தக் காலப்பகுதியில் 12 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 30,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 6,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 3,126 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,998 பேரும், கண்டி மாவட்டத்தில் 2,441 பேரும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியில் 21 சுகாதார வைத்திய அதிகாரி அதிகார வரம்புகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT