அரச நிறுவனங்களை உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு

இக்குழுவானது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திரமாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை ஆராயவுள்ளது.

அரச நிறுவனங்களை உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்காலிகமான கட்டடங்களில் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட பல அரச நிறுவனங்களை நிரந்திரமான இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான பொருத்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களை  இனங்காண்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்  நெறிப்படுத்தலில் புதன்கிழமை  (12) புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வேளை, இக்குழு அமைக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இக்குழுவானது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திரமாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை ஆராயவுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் கடந்தகால மற்றும் நிகழ்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தோனா அபிவிருத்தி, புதிய மையவாடி நிர்மனித்தல் சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள்  நிரந்திர கட்டங்களுக்கு மாற்றுதல்  உட்பட சமகால அபிவிருத்தி செயல்முறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் நுஸ்ரத் பானு, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம் , சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள்,  திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் இயங்கி வருகின்ற இடம் கடந்த காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில், பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய, துப்பரவு செய்யப்பட்டு, புதிய பொலிஸ் நிலையமாக 2021.11.29 அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. 

இதனால் இப்பகுதியில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனைகள் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT