திருமணம் முடித்த ரெடின் கிங்ஸ்லி… சீரியல் நடிகையான மணப்பெண் யார் தெரியுமா?

அஜித்குமார் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தின் ருக்கு ருக்கு பாடலில் இவர் நடனமாடி இருப்பார். ஆனால் அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு அமையவில்லை.

திருமணம் முடித்த ரெடின் கிங்ஸ்லி… சீரியல் நடிகையான மணப்பெண் யார் தெரியுமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சந்தானம் நடித்த ஏ1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி . 46 வயதாகும் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். 

அஜித்குமார் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தின் ருக்கு ருக்கு பாடலில் இவர் நடனமாடி இருப்பார். ஆனால் அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு அமையவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி ஏற்பாட்டு செய்யும் தொழிலை செய்து வந்தார். அந்த சமயத்தில் இயக்குநர் நெல்சன் திலீப் குமாருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

அதன் காரணமாக சிலம்பரசன் இயக்கத்தில் நெல்சன் இயக்கவிருந்த வேட்டை மன்னன் திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது.  இதனால் மீண்டும் ரெட்டின் கிங்ஸ்லியின் சினிமா பயணம் தொடராமல் போனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் நயன்தாராவுடன் நடித்தார். அந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. இதற்குப் பிறகு சந்தானம் நடித்த A1 திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

அதன் மூலம் சிவகார்த்திகேயனின் டாக்டர் ரஜினிகாந்தின் அண்ணாத்த, ஜெயிலர், விஜய் உடன் பீஸ்ட் திரைப்படங்களில் நடித்தார். அதில் இடம்பெற்ற அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நகைச்சுவை நடிகராக இருக்கும் ரெட்டின் கிங்ஸ்லி, நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. சங்கீதா மாஸ்டர் திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருப்பார். இது தவிர இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டார் சங்கீதா. 

இவர்கள் திருமணத்திற்கு திரைத்துறை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT