இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 17, 2020 திகதியிட்ட சிறப்பு வர்த்தமானியின்படி, இஞ்சி இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் உள்நாட்டு பாவனைக்கான உலர் இஞ்சியின் வருடாந்த தேவை 5,167 மெட்ரிக் தொன் என விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இஞ்சியின் அளவு வருடத்திற்கு 19,375 மெட்ரிக் தொன்கள் ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சந்தையில் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சி கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக விதை இஞ்சியை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சு அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு (2025) நாட்டில் உள்ள டொலர் கையிருப்பை பாதுகாக்கும் வகையில் உள்ளுர் கைத்தொழில்களுக்கு தேவையான இஞ்சியை மட்டும் இறக்குமதி செய்வதே பொருத்தமானது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT