நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு..  இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு..  இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலையில் இன்று முதல் (26) தற்காலிகமாக சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் வடக்கு, வடமத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT