7 நாட்கள் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் திகதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

7 நாட்கள் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் திகதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24 முதல் 28 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அத்துடன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT