33 வயது சகோதரி கொலை; சகோதரர் கைது 

கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

33 வயது சகோதரி கொலை; சகோதரர் கைது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கம்புருபிட்டியவில் தனது சகோதரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை வீதியிலுள்ள அவரது 33 வயது சகோதரி வீட்டில் தலையில் காயங்களுக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர்களின் தாயார் சுயநினைவின்றி காணப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பில் கம்புருபிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT