மதுபானசாலைகளுக்கு பூட்டு... வெளியான அறிவிப்பு

கடிதத்தின் பிரதிகள் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுபானசாலைகளுக்கு பூட்டு... வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி  நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்து உள்ளது.

முன்னதாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், “தைப்பொங்கல் தினத்தில் மதுபானசாலைகளை மூடுவதனால் மது விற்பனையை அல்லது மது பாவனையை இல்லாது செய்துவிட முடியாது.

எனினும், நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளில் தமிழர்களே அதிகமாக தொழில் புரிகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தை குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக இரண்டு மாவட்டங்களிலும் மதுபானசாலைகளை ஒரு தினத்துக்கு மூடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேற்படி கோரிக்கை எற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடிதத்தின் பிரதிகள் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT