இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது தென்மேற்கு பருவ மழையின் தீவிர நிலை காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (19) வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும்.

மத்திய மலையநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 முதல் 60 கி.மீ. வரையிலும் காற்று வீசும்.

ஏனைய பகுதிகளில் காற்று 30 தொடக்கம் 40 கி.மீ. வரையான பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT