விலைகளை குறைக்காத வர்த்தகர்கள் - நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

விலைகளை குறைக்காத வர்த்தகர்கள் - நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

இதனை நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT