வவுனியாவில் பட்டப்பகலில் கைவரிசை காட்டிய இளைஞன் கைது

சமைலறை புகைக்கூடு வழியாக உள் நுழைந்து நகைகள், அலைபேசிகள், கமெரா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வவுனியாவில் பட்டப்பகலில் கைவரிசை காட்டிய இளைஞன் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 23 வயது இளைஞனை, வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவபுளியங்குளம், குமன்காடு மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலில் பூட்டப்பட்டிருந்த 5 வீடுகளுக்குள் சென்ற திருடர்கள், சமைலறை புகைக்கூடு வழியாக உள் நுழைந்து நகைகள், அலைபேசிகள், கமெரா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடியின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கற்குழி பகுதியைச் சேரந்த மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

திருடப்பட்ட தொலைபேசி, கைக்கடிகாரம், கமெரா மற்றும் உருக்கப்பட்ட நகைகள் என்பன அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர், போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT