உலகின் உயரம் குறைந்த ஜோடி கின்னஸ் சாதனை

உலகின் உயரம் குறைந்த ஜோடியின் திருமணத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

உலகின் உயரம் குறைந்த ஜோடி கின்னஸ் சாதனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகின் உயரம் குறைந்த ஜோடியின் திருமணத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் உயரம் குறைந்த ஜோடி என பெயர் பெற்றவர்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும். இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் ஆவார்கள்.

சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு சந்தித்து கொண்டனர். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது 31-28 வயதில் திருமணம் செய்து கொண்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைந்த ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்து உள்ளது.

இதுதொடர்பான, புகைப்படங்கள் வைரலான நிலையில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT