கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தம் – கொழும்பு மாநகர சபை

பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பில் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தம் – கொழும்பு மாநகர சபை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு மாநகர சபை (CMC), தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  வாகன நிறுத்துமிடக் கட்டண வசூலை மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இன்று (18) நடைபெற்ற  கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்து நடைபெற்று வரும் உலகளாவிய மோதல்கள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னர் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அத்தகைய அனைத்து வசூல்களும் தற்போது மறு அறிவிப்பு வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பிரதி மேயர் மேலும் குறிப்பிட்டார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT