இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோரிய இந்திய மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனான தொலைபேசி உரையாடலின் போது இந்தக் கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோரிய இந்திய மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு
இந்திய மீனவர்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனான தொலைபேசி உரையாடலின் போது இந்தக் கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை, குறிப்பிட்ட காலத்திற்கு இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தமிழக கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வரமாட்டார்கள் என தமிழக அரசு உறுதியளித்த பின்னரே மீன்பிடி விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய-இலங்கை மீனவ பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT