செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவுவோருக்கு பணப்பரிசு அறிவிப்பு
புதுக்கடை நீதிமன்றில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: - 25 ஆண்டுகள்
அடையாள அட்டை - 995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.
குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின் பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 - 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 - 8591735 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
