மஹர சிறைச்சாலை மோதல்: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 6 பேர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலை மோதல்: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மஹர சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 6 பேர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த மோதலின் போது, சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் அலுவலகம் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றுக்கு கைதிகள் தீ வைத்துள்ளனர். 

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் மேலதிக சிறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். 

தற்போது சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT