சிறைச்சாலை பாதுகாப்பு, கைதிகள் நலனை மேம்படுத்த கூட்டுப் பொறிமுறை: ஜனாதிபதி உத்தரவு

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறைச்சாலை பாதுகாப்பு, கைதிகள் நலனை மேம்படுத்த கூட்டுப் பொறிமுறை: ஜனாதிபதி உத்தரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால சீர்படுத்தல் நடவடிக்கைகளை கையாள்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்குமாறு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

இந்த பொறிமுறையானது, நாட்டின் அனைத்து 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கும். இதில் சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை (STF) மற்றும் தேவைப்படும் பட்சத்தில் ஆயுதப்படை அதிகாரிகள் அங்கம் வகிப்பார்கள்.

இந்தப் புதிய கட்டமைப்பு அடுத்த வாரத்துக்குள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மீளாய்வு செய்தல், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேற்பார்வையிடல் மற்றும் அவசர காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகக் கூட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT