இரண்டாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வீழத்தியது இந்தியா
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது. இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
இதில், முதலாவதாக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ஜோஷ் இங்லீஸ் 2 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களிலும், டிம் டேவிட் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.14 ஓவரில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வாடே களத்தில் விளையாடினர்.
இதில், மார்கஸ் 45 ரன்களில் அவுட்டானதை அடுத்து, மேத்யூ வாடேவுடன் சியோன் அபாட் விளையாடி ஒரு ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, நாதன் எல்லிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.16 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 155 ரன்கள் எடுத்திருந்தது.
20 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.17வது ஓவரில் ஆடம் சம்பாவும் ஒரு ரன்னில் அவுட்டானதை அடுத்து தன்வீர் சங்கா களமிறங்கினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து டி20 தொடரில் 2வது ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.