பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு

இந்த விலை அதிகரிப்பானது  செவ்வாய்க்கிழமை (18)  நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது  செவ்வாய்க்கிழமை (18)  நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்துக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாயினாலும், தேநீரின் விலை 05 ரூபாயினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT