ஹைலன்ஸ் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு போலி ஆவணம்: ஜீவனின் தலையீட்டால் தீர்வு

ஹட்டன் பிளான்டேசனின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேற்படி காணியை பாடசாலைக்கு வழங்குவதற்கு ஏற்கெனவே கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஹைலன்ஸ் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு போலி ஆவணம்: ஜீவனின் தலையீட்டால் தீர்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் பிளான்டேசனின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேற்படி காணியை பாடசாலைக்கு வழங்குவதற்கு ஏற்கெனவே கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த கல்லூரியின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி விடுவிப்புக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு விடுவிப்புக்கான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்தக் காணி இப்பிரதேசத்தை சேர்ந்த சிலரின் உதவியுடன் போலி பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் தற்காலிக கடையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்ட கடை அகற்றப்பட்டதுடன், பாடசாலைக்கு உரித்தான அந்த காணியை பாடசாலைக்கு சட்டப்பூர்வமாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

(க.கிஷாந்தன்)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT