வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இதன்படி, நாளை (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நாளை (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதற்கமைய, நாளைய தினம்(23) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.20 மணிமுதல் இரவு 9.20 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT