பொகவந்தலாவை பகுதியில் விபத்து - மூவர் காயம்
பொகவந்தலாவை, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டனுக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை வி்ட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (13) மதியம் 12.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பொகவந்தலாவை, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டனுக்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்,
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மேற்படி சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு மூன்று பேரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். (க.கிஷாந்தன்)
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -