காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
காலநிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (20) முதல் எதிர்வரும் நாட்களில் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில். சுமார் 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -